சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்குப் பிறகு பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கம்பளை அட்கல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோவிட் நோய்த் தொற்று முடிவுக்கு வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த மரணம் பதிவாகியிருப்பது ஒரு சிறப்பு நிகழ்வாகும்.

Omicron JA 1 (JN.1) வைரஸ் தற்போது நாட்டில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்துகிறார்.

கடந்த 4 வாரங்களில் உலக அளவில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை 52% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

850,000 கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் மீளவும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரியுள்ளது.