வெலிக்கடை மெகசீன் சிறைச்சாலையில் மதபோதகர் ஜெரம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்ட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது சிறைச்சாலை அதிகாரிகள் கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடித்துள்ளனர். ஜி மற்றும் எச் வார்டுகளில் நடத்தப்பட்ட சோதனையில், 33 கையடக்க தொலைபேசிகளும் 35 தொடர்புடைய சிம் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜெரோம் பெர்னாண்டோ தற்போது மெகசின் சிறைச்சாலையின் ஜி வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை திணைக்களம் ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.