இனி வரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையில் வரி செலுத்துவோரின் அடையாள எண்ணையும் (TIN) உள்வாங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

. அனைத்து குடிமக்களும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது அவர்களுக்கு வரி இலக்கமும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

தேசிய வருவாய்த்துறையின் தரவுகள் கணினிமயமாக்கப்பட்டு வரி தொடர்பான செயல்முறை மேலும் வலுப்படுத்தப்படும் என்றார்.