இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தமைக்கான காரணம் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் வெளிச்சம் அற்ற இருளான நிலைமையே காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மின்விளக்கு கம்பங்கள் பொருத்தப்பட்ட போதிலும் போதைக்கு அடிமையானவர்கள் பணத்திற்காக வீதியின் இருபுறமும் உள்ள பாதாள மின் கம்பிகளை அறுப்பதால் வீதி இருளில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காவல்துறை தலையிட்டு இந்த திருட்டுகளை தடுக்க கடுமையாக முயற்சித்தாலும், கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் நபர்கள் மீண்டும் மீண்டும் அதே நடவடிக்கையில் ஈடுப்படுவதாகவும் இதன்காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது மிகவும் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.