குருநாகலில்  எரிபொருள் இல்லாதமையினால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதன்போது போராட்ட காரர்கள் ராஜபக்சவினரை எமது பணத்தை ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு செல்லுமாறு கோஷம் எழுப்பினர். நாமும் கோட்டாக்கே வாக்களித்தோம். வாக்களித்த நாமே கோருகிறோம் செல்லுங்கள் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

அதன்பின்னர் அந்த வீதி வழியாக வந்த அம்புலனஸ் வண்டிக்கு இடமளிக்க வீதியை மறித்திருந்த மக்கள் இடமளித்தனர்.இதன்போது அம்புலன்ஸ் வண்டி செல்ல முன் வசதி படைத்த ஒருவரின் பென்ஸ் கார் ஒன்று போராட்ட காரர்களையும் மோதிக்கொண்டு செல்ல முற்பட்ட போது பிரதேச மக்கள் காரை மறித்து தாக்கியதுடன் ,காருக்குள் இருந்த ஒருவர் மீது ஹெல்மட் மூலம் தாக்கியதுடன் கார் உரிமையாளர் என கருதப்படும் சாரதி பிரதேசத்தவர் ஒருவரை கடுமையாக தாக்கினார்.இதனால் கொதிப்படைந்த மக்கள் சாரதியை கடுமையாக தாக்கினர்.காரின் பின் கண்ணாடியை உடைத்தனர்.இந்த சம்வத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதனால் கோபமுற்ற மக்கள் அவரை விடுதலை செய்யாவிடின் மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்தி கொள்வோம் என மிரட்டினர்.இதன்போது நீதிமன்றத்திடம் அவரை ஒப்படைப்பதாகவும் இல்லையேல் கார் உரிமையாளருடன் சுமுகமா பேசி விடுவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.