கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்துகளின் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளதன் காரணமாக தனியார் வைத்தியசாலைகள்,கிளின்க்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்து அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்னர், இலங்கையில் 50 வீதமான நோயாளிகள் பொது வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கும் (OPD) மேலும் 50 வீதமானவர்கள் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருத்துவ கிளினிக்குகளுக்கு சென்றதாகவும் தற்போது அந்த மாறியுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.