27 தொடக்கம் ஜுலை 1 வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கீழ்வறுமாறு முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுரை வழங்ககியுள்ளது

இதன்படி,

  1. போக்குவரத்து சிக்கல் இல்லாத கிராமிய மற்றும் ஏனைய பாடசாலைகள் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டதை போன்று கல்வி நடவடிக்கைகளை  முன்னெடுத்து செல்வதுடன், போக்குவரத்து சிக்கல் காரணமாக பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்கள் இருப்பின் குறித்த ஆசிரியர்களின் விடுமுறைகளை அதிபர் பிரத்தியேக விடுமுறைகளில் இருந்து விடுவித்து அவர்களுக்கு உரிய காலஅட்டவணையை தயார் செய்ய வேண்டும்.
  2. கடந்த வாரம் நடத்தாத நகர்புற பாடசாலைகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் நடத்த வேண்டும்.செவ்வாய்,புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 7.30 தொடக்கம் 1.30 வரை நகர்புற பாடாசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கைகளை நடத்தும் நாட்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் அதிபருக்கும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் பாடசாலைக்கு வராத நாட்களில் online மூலம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுத்தல்/வீட்டு செயல்முறைகளை வழங்கல்
  3. பாடசாலைக்கு வரமுடியாத ஆசிரியர்களின் விடுமுறை பிரத்தியேக விடுமுறையில் இருந்து நீக்க கூடாது.
  4. கடந்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்த ஆசிரியர் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு நன்றி பாராட்டு