அரச வைத்தியசாலைகளில் பெரும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் நாட்டின் பாமசிகளில் கூட 39 க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக அவசர உயிர் காப்பு மருந்துகள்,புற்றுநோய்,எயிட்ஸ் உள்ளிட்ட பாரதூரமான நோய்களுக்கான மருந்துகளும் நாட்டில் இல்லை. மேலும் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளாக கருதப்படும் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகளில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஆரம்ப காலங்களில் இலவசமாக வழங்கிய தடுப்பூசிகளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கூட வெளியில் சென்று பணம் கொடுத்து கொள்வனவு செய்யும் பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலை நீடித்தால் சுனாமியை பார்க்க கடுமையான உயிரிழப்புகள் மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கையில் ஏற்படும் என்றும் அவசர நிலையை பிரகடணப்படுத்தி உடன் மருந்துகளை இறக்குமதி செய்யுமாறும் அரச வைத்தியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.