நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதை தடுப்பு நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பொலிஸாரின் நடவடிக்கைகளினால் தற்போது போதைப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிடுகின்றார்.

இதன்காரணமாக போதைப்பொருள் விலை அதிகரித்துள்ளது. கடத்தல்காரர்களால் 2000 ரூபாய்க்கு விற்கப்படும் போதைப்பொருள் பாக்கெட் தற்போது 8 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.