சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த தேச நாயகர்களையும், தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் தற்போதைய தேச அன்பர்களையும், மக்களையும் இதயம் நிறைந்த பக்தியுடன் நினைவு கூர்வதாக தனது சுதந்திர தின செய்தியில்  கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேய காலணித்துவத்திலிருந்து எமது நாடு விடுதலைப் பெற்று 74 வருடங்கள்  முழுமையந்துள்ளது. சுதந்திர வீரர்களின் முயற்சியின் பிரதிபலனாக  அரசியல் மற்றும் மானிட விடுதலை சுதந்திரம் என்பன எமக்கு கிடைத்தது. அவற்றை பாதுகாத்து பலப்படுத்துவது இந்நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் எம்மொருவருக்கும் உள்ள பொறுப்பாகும்.

ஆயினும் துரதிஷ்டவசமாக எமது நாடு, சுதந்திரத்தின் பின்னர், நெறிமுறைகள், அரசியல் கோட்பாடு, அதிகார பேராச‍ை, ஊழல்களினால் சொத்துக்களை கையகப்படுத்தும் முறைக்கேட்டினால் பொருளாதாரம், சமூக, குடியுரிமையும் அதாள பாதாளத்தை நோக்கி சென்று  கொண்டிருக்கிறது.

கடந்த 74 ஆண்டுகளில் பெற்ற சுதந்திரம்  மறுக்கப்படும் பயங்கரமான நிலை  உருவாகியுள்ளது. ஆட்சித் தலைவர்களின் தொலை நோக்கற்ற செயல்களினால் நாட்டில் வாழும் பல்வேறு இன, மதத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் சட்டத்தை சுதந்திரமாக நடைமுறைப்படுத்த இடமளியாது.

அரசியல் தலைவர்களின் தேவைக்கேற்ப செயல்படுவதினால் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு, சுதந்திரம் வெறும் கானல் நீராகியுள்ளது.

சுதந்திரத் தினம் என்பது மனித கண்ணியம், மகத்துவமேயன்றி, வெறுமனே கொண்டாட்டம், சுதந்திர தின உரை, அணிவகுப்பு  போன்றவையல்ல. நாட்டை அன்பு செய்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் தமது மனசாட்சியை மீள்பரீட்சித்து, 74 வருடங்களாக சிறிது சிறிதாக படுகுழியை நோக்கி செல்லும் நாட்டை  விடுவிக்க, தகுதியாக மாற்றத்தைத் தேட வேண்டும்.

அதற்காக அர்ப்பணிப்பதே சுதந்திரத்தை அனுஷ்டிக்கும் சரியான வழியாகும். கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தை  பலவீனமடையச் செய்யாது, அதனை பலப்படுத்துவதற்கு புரட்சிகரமான  சிந்தனை, கொள்கையின் மாற்றத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பதை ‍ சொல்லத் தேவையில்லை.

நாம் அனைவரும் அந்த மாற்றத்திற்காக அர்ப்பணிப்போமானால், அது உண்மையான எமது தாய் நாட்டுக்காக நாம் செய்யும் மிகப் பெரிய சேவையாக அர்ப்பணமாக  மாறும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.