கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை(04) ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அதன் காலஅட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இதன்படி கொரிய மொழி புதிய பாடமாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அந்த பாட கால அட்டவணையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பாடத்திற்கான முந்தைய கால அட்டவணையை பயன்படுத்த வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

ஒரு சில இணையத்தளங்களில் தவறான கால அட்டவணை குறிப்பிடப்படலாம்.எனவே பரீட்சை அனுமதி பத்திர குறிப்பில் உள்ள அட்டவணையை பின்பற்றுமாறு கோரியுள்ளார்.

பரீட்சார்த்திகளின் நலனுக்காக கால அட்டவணை,தோற்றும் பாடங்கள், பாட இலக்கம், மொழிமூலம் ஆகியன அனுமதி பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதனை பின்பற்றுமாறு ஆணையாளர் கோரியுள்ளார்.