டெங்கு நோய் பரவும் அதி தீவிர வலயமாக கண்டி மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்தில் நாளாந்தம் 72 பேரளவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவதாகவும் இதுவரை 7422 பேர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த ஆண்டில் மாத்திரம் கண்டியில் 9 பேர் டெங்குவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி இந்த மாதத்தை டெங்கு தடுப்பு மாதமாக அறிவித்துள்ளதுடன் வீடு வீடாக சுகாதார பரிசோதகர்கள் வருகை தரவுள்ளதாகவும் ஆகவே சுற்றுபுற சூழலை சுத்தப்படுத்தி வைக்குமாறும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.