தொலைபேசி கோபுரங்களின் ஜெனரேட்டர்களுக்கான டீசல் கிடைக்கப் பெறாமையால், தொலைபேசி கோபுரங்களில் மின் தடை ஏற்படும் போது அவற்றின் 3G மற்றும் 4G டிரான்ஸ்மிட்டர்கள் செயலிழக்கப்படும். இதனால் மின்வெட்டு நேரங்களில் இணைய வசதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதற்காக டீசல் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்ட போதிலும் போதிய அளவு டீசல் இல்லாமையால் கிடைக்கும் மின்சக்தி போதுமானதாக இல்லை.

இவை செயலிழக்கப்படும் போது 3G, 4G Network அதிவேகங்களில் செயற்படாது எனவும்இதன் விளைவாக அதிக சனத்தொகை உள்ள பகுதிகளில் சிக்னல் குறுக்கீடு ஏற்பட்டு 2G (384kbps, அல்லது அதிகபட்சமாக 48 கிலோபைட் ஒரு வினாடி) வேகத்தில் இயங்கும் என தெரிவித்துள்ளன