வரி செலுத்தாமல் தவற விடுவதனை பணமோசடிக்கு உட்பட்ட குற்றமாக மாற்றுவதற்கான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி, தற்போதுள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இது தொடர்பான திருத்தங்கள் ஏற்கனவே சட்ட வரைவு நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதன் கீழ், வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. விசாரணையின் மூலம் குற்றம் இழைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சட்டமா அதிபர் ஊடாக வழக்கு தொடுக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.