நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வடக்கு,கிழக்கில் தாழ்நிலை பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக இரணைமடு, கந்தளாய் வான்கதவு திறக்கப்பட்டமையினாலும் வவுணதீவு உட்பட பல குளங்கள் நிரம்பியதனால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளம் காரணமாக சுமார் 10,000 பேர் வரை பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

முல்லைத்தீவு,கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது வீடுகளுக்குள் நீர் புகுந்தமையினால் அவதிக்கு உள்ளாகியுள்ள மக்கள் அனர்த்த நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு உட்பட ஏனைய பகுதிகளில் வெள்ளத்தின் நீர்மட்டத்தின் அதிகரிப்பினை அடுத்து மீட்பு பணிகளில் இராணுவம் முன்னெடுத்து வருகின்றது.