பல்கலைகழக மாணவர்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் பல்வேறு இடையூறுகளை விளைவித்தது.எனினும் அந்த இடையூறுகளை மீறி மாணவர்கள் விஜேராமயில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்தவின் உத்தியோகபூர்வ வாசஸ்தளம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பின் பகுதியான ஹில்டன் ஹோட்டல் பகுதிகளை மாணவர்கள் சுற்றிவளைத்தனர்.இதன்போது பொலிஸாருக்கு இடையில் மோதல்களும் இடம்பெற்றன