அரசாங்கத்தின் பிளவு மேலும் உக்கிரமடையும் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி ஹாரிஸ்பத்துவ தொகுதி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ ஹலீம், ராஜபக்ச குடும்பத்தின் அங்கத்தவர் போல் செயற்பட்ட டலஸ் அழகப்பெரும அமைச்சரே அரசாங்கத்துடன் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்கத்திலுள்ள பலரும் ராஜபக்சவினருடன் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்த அவர் நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி வெல்வது உறுதியாகும்.அதற்கான பெரும்பான்மை எதிர்க்கட்சியிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு மொட்டு கட்சியோடு எக்காரணம் கொண்டும் ஆட்சி அமைக்கப்போவதில்லை என தெரிவித்த ஹலீம் எம்.பி, தேசிய அரசாங்கத்தின் ஊடாக பல்வேறு விமர்சனங்களுக்கு கடந்த காலங்களில் தாம் உள்ளாக நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்து விருப்பம் தெரிவிப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டாலும் வெளியே இருந்து கொண்டு இடைகால அரசாங்கத்தை அமைப்போருக்கு ஆதரவு வழங்குவோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ ஹலீம் அவர்களது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.