பாடசாலை வேன்கள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை அருகில் உள்ள இபோச டிப்போவில் இருந்து தடையின்றி வழங்கவும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் போக்குவரத்துச் சபையும் உடன்பாடு தெரிவித்துள்ளன.

இந்த திட்டத்திற்காக வாரத்தில் இரண்டு நாட்கள் (புதன் மற்றும் சனி) உரிய நிர்வாகத்தின் கீழ் தேவையான அளவு எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து விடுவிக்கப்படும்.

‘பாடசாலை சேவை’ எனப்படும் புதிய தனியார் பேருந்து சேவை ஆகஸ்ட் 01 முதல் தொடங்கும், மேலும் இந்த பேருந்துகள் பேருந்து பெயர்ப்பலகையில் தொடர்புடைய பாடசாலை பெயர்களுடன் தினசரி இரண்டு பயணங்களில் இயக்கப்படும். தனியார் பேரூந்து சாரதிகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த பஸ்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளதுடன் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிரமமின்றி இந்த போக்குவரத்து சேவையை பயன்படுத்த முடியும்.

இது தொடர்பான பரந்த கலந்துரையாடல் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.