இந்திய பிரபல நடிகர் விஜய் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு சில காட்சிகளுக்காக விஜய் உட்பட படக்குழுவினர் ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் இலங்கைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.