1967 ஆம் ஆண்டு போரில் கைப்பற்றிய கிழக்கு ஜெருசலம் பகுதியை தலைநகராக ஏற்று சுதந்திர பலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்திக்கொள்ள மாட்டோம் என சவூதி அரேபியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் இன்று (07) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

1967ம் ஆண்டு கிழக்கு ஜெருசலேமுடன் எல்லையில் உள்ள சுதந்திர பாலஸ்தீன நாட்டையும் அதன் தலைநகராக கிழக்கு ஜெருசலமையும் அங்கீகரிக்காத ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களுக்கு சுதந்திர பலஸ்தீனை நிறுவ சவூதி அரேபியா மீண்டும் அழைப்பு விடுத்ததாக அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா பகுதிக்கு எதிரான “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு” நிறுத்தப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலியப் படைகள் உடன் வெளியேற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு அமெரிக்க தொடர்ந்து முயன்று வருகிறது.

சவூதி சென்ற அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மன்னர் சல்மானை சந்தித்திருந்தார். இதன்போது மன்னர் சல்மானும் இதனை வலியுறுத்தியுத்திள்ளார். அதாவது, காஸா போருக்கு முற்றுப்புள்ளி, சுதந்திர பலஸ்தீனத்திற்கு நம்பகமான நடவடிக்கைகளே இஸ்ரேலுடன் உறவு முறையை இயல்பாக்க வழிவகுக்கும் என கூறியுள்ளார். இந்த தகவலை பிளிங்கனும் ஊடகங்களில் உறுதிப்படுத்தியுள்ளார்.