ஒரு கிளாஸ் வெந்நீருக்கு நூறு ரூபாய் அறவிட்ட பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த உணவகத்தில் உணவு எடுத்தமைக்கான மொத்த கட்டணம் 22,000 ரூபா வரை ஒரு குழுவினரிடம் அறவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. நுகர்வோர் சட்டத்தில் வெந்நீருக்கு கட்டணம் வசூலிக்கும் முறை இல்லை என அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.