.*

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறும்.

பின்னர், டிசம்பர் 23ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை, நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது