காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்தேறியுள்ளதாகவும் ஆகவே இனப்படுகொலைகளை இஸ்ரேல் தடுக்க வேண்டும் எனவும் இனப்படுகொலையை தூண்டுவோரை தண்டிக்க வேண்டும் என்றும் மேலும் காஸாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஒரு மாதத்தில் தெரிவிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. எனினும் தென்னாபிரிக்கா கோரிய போர்நிறுத்தம் தொடர்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை

காசாவில் போரை நிறுத்துவதற்கான பாலஸ்தீனிய மக்களின் எதிர்பார்ப்புகளை தீர்ப்பு மறுத்தாலும் இனப்படுகொலை தொடர்பில் உறுதியான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அத்துடன் மோதலைத் தூண்டிய இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதல்களில் பிடிபட்ட பணயக்கைதிகளை விடுவிக்குமாறும் ஹமாஸ் அமைப்புக்கு சர்வதேச நீதிமன்றம் அழைப்பு விடுத்தது.

பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் இந்த தீர்ப்பு தொடர்பில் கூறும் போது “எந்த அரசும் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல” என்பதை வரவேற்கத்தக்க நினைவூட்டலை தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கூறியது. மூத்த ஹமாஸ் அதிகாரி சமி அபு சுஹ்ரி ராய்ட்டர்ஸிடம் கூறும் போது “காசாவில் ஆக்கிரமிப்பை தனிமைப்படுத்தவும் அதன் குற்றங்களை அம்பலப்படுத்தவும்” பங்களிப்பதாக அவர் கூறினார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாஹு போர்நிறுத்தத்திற்கு உத்தரவிடாமையை வரவேற்றதுடன் ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டை “மோசமானது” என்று நிராகரித்தார் மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்றார்

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றாலும், நீதிமன்றத்திடம் அதன் தீர்ப்பை அமுல்படுத்த எந்த பொறிமுறையும் இல்லை.

சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோன் டோனோகு, காசாவில் பாலஸ்தீனியர்களின் அவலநிலை, குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கைப் பற்றி விவரித்தார் மற்றும் ஐ.நா அதிகாரிகளிடமிருந்து மனிதாபிமான அவசரநிலை பற்றிய விரிவான விளக்கங்களை மேற்கோள் காட்டினார்.

தென்னாப்பிரிக்கா நீதிமன்ற உத்தரவை சர்வதேச சட்ட ஆட்சிக்கு கிடைத்த” வெற்றி” என்று கூறியது. அதுவும் ஐரோப்பிய யூனியனும் இஸ்ரேலும் அதை உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கூறியது.