உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் (SJB, NPP, TNA, SLFP, TPA, SLMC, ACMC) கூட்டாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளன.

“சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கான ஒரே தடையை உயர்நீதிமன்றம் தற்போது நீக்கியுள்ளது. 19 மார்ச் 2023 அன்று அல்லது அதற்கு முன் நடத்துவது உங்கள் கட்டாயக் கடமையாகும். நீங்கள் திறைசேறி செயலாளருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை நாங்கள் காணவில்லை என கூறி இக்கடிதத்தை எம்.ஏ சுமந்திரன் டுவிட் செய்துள்ளார்.