மதுபான போத்தலில் திருட்டு ஸ்டீக்கர் ஒட்டப்படுவதனால் 80-100 பில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்படுவதாகவும் இந்த முறையால் மதுபான போத்தல்களுக்கு 62 சதவீதமானோரே வரி செலுத்துவதாகவும் இந்த ஸ்டீக்கர் மோசடியின் பின்னால் மதுவரி திணைக்கள உயர் அதிகாரியும் பெரிய கும்பலும் தொடர்புப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த மோசடியை நிறுத்த டீஜிட்டல் ஸ்டீக்கர் முறைமையை மாத்திரம் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற ரீதியாக மேலும் அலசி ஆராய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார்.

மேலும் சாதாரண ஸ்டீக்கர் மற்றும் டீஜிட்டல் ஸ்டீக்கர் இரண்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஏன் அவ்வாறு அனுமதிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய அவர், இதில் இன்னுமொரு மோசடியும் நடந்துள்ளதாகவும் டீஜிட்டல் ஸ்டிக்கருக்கு 90 சதமே செலவாகுவதாகவும் ஒரு சாதாரண ஸ்டீக்கருக்கு 1.90 ரூபா செலவு ஆகுவதாகவும் எனினும் டீஜிட்டல் ஸ்டீக்கருக்கும் 1.90 ரூபாவே அரசாங்கத்திடம் இருந்து ஸ்டீக்கர் தயாரிப்பு நிறுவனம் பெறுவதாகவும் இதிலும் மோசடிகள் நடந்துள்ளதாகவும் டீஜிட்டல் ஸ்டீக்கருக்கு மாத்திரம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் இதிலும் தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கு அமைய கண்டறியும் வகையில் ஸ்டீக்கர் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு திருட்டுத்தனமாக செலுத்த வேண்டிய வரி செலுத்தப்படாதமையே IMF கடன் தாமதமானதாகவும் ஆகவே சாதாரண மக்கள் மீது வரி விதிப்பதை கட்டுப்படுத்தி இவ்வாறான வரி செலுத்த வேண்டிய வரிகளை உடன் பெற வேண்டியதன் கட்டாயம் அரசாங்கத்துக்கு உள்ளது. என்றார்.

இன்று (08) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.