ஐக்கிய மக்கள் சக்தியினருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாக ஹரீன் பெர்னாண்டோ கூறியுள்ளார். ஐ.ம.ச மக்கள் மத்தியில் பலமாக உள்ளது. ஆகவே வங்குரோத்தான கட்சியுடனோ அரசாங்கத்துடனோ ஐ.ம.ச.வினர் இணைய மாட்டார்கள். இரகசியமாக பேசவுமில்லை,பேசவும்மாட்டோம் .ரணிலினால் முடியாது என்று கூறி பதுளை கூட்டம் நடத்தி சஜித் பிரேமதாச தலைமையில் தனிகட்சி ஆரம்பித்தவரே ஹரீன். ஈஸ்டர் தாக்குதலுக்கு மொட்டுவே காரணம் என்று கூறி தற்போது மொட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவரே ஹரீன். எனவே ஐ.ம.ச மக்கள் ஆதரவில் முன்னிலையில் உள்ளது. ஆகவே எவரும் செல்லமாட்டார்கள் என கீன்ஸ் நெல்சன் எம்.பி தெரிவித்தார்.

நெல் கொள்வனவில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்றும் அரசாங்கம் பொருளாதார விவகாரத்தில் உண்மையை கூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இன்று (31) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.