மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அடக்குமுறையை அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மிரிஹான சம்பவத்திற்கு பின்னால் அடிப்படைவாத குழு இருப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்த போதிலும் அரச பயங்கரவாதமே  நாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அடக்குமுறையையும் அரச பயங்கரவாதத்தையும் மக்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகித்தால் கடுமையான விளைவை ஜனாதிபதியும் அரசாங்கமும் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் மிரிஹானவில் காணப்பட்ட பால்மா,கேஸ் வரிசையை நிறுத்த குறித்த விற்பனை நிலையங்களை ஜனாதிபதி உத்தரவின் பேரில் மூடியதாகவும் அதன் விளைவே மிரிஹானயில் போராட்டம் நடக்க காரணம் என்று தெரிவித்த முஜிபுர், மிரிஹான வன்முறைக்கும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கும் அரச தரப்பே காரணம் என ஊடகவியலாளர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள ஊடகவியலாளர் சன்ஜீவவை தான் பார்க்க சென்றதாக கூறிய முஜிபுர், தான் கலுபோவில வைத்தியசாலைக்கு செல்லும் போது சன்ஜீவயின் கண் மீது பரிசோதணை நடத்தப்பட்டதாகவும் தாக்குதலினால் அவரது கண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஊடக நிறுவனங்கள்,சிவில் அமைப்புகள்,அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தெரிவித்த அவர் ,தமக்கு கீழ் பணிபுரியும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பது ஊடக பிரதானிகளின் பொறுப்பு என்றும் அதற்காக ஊடக பிரதானிகள் முன்வர வேண்டும் என்றார்.