ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கும் திட்டத்தின் 3 கட்டங்களில் கலந்து கொள்ளும் முகமாக சிலாபம் பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு விஜயம் செய்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி விமலசிறி ஜயசுந்தர பேராயரையும், பிரதேசத்தைச் சேர்ந்த கத்தோலிக்க போதகர்கள் குழுவினரையும் சிலாபம் பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சிலாபம் பேராயர் கலாநிதி விமலசிறி ஜயசுந்தர பேராயருக்கும் இடையில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நீண்டநேரம் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் நீதியை நிலைநாட்ட ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, நாட்டின் சட்டத்தின் பிரகாரம், பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினருக்கும் அவர்களின் தராதரம் பாராமல் தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிலாபம் பேராயர் முன்னிலையில் உறுதியளித்தார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனைய தரப்பினரின் ஒத்துழைப்புடன் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நியாயமான விசாரணை நடத்தப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

சிலாபம் பேராயர் கலாநிதி விமலசிறி ஜயசுந்தர அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் அவரது சமூகப் பணிகளின் வெற்றிக்காக ஆசீர்வதித்தார்.

NEWS CLIP
https://youtu.be/6PiPwdMgn2M?si=QnxYZOVfSULom3Lb