காஸாவின் கான் யூனுஸ் நகரை கைப்பற்றுவதற்கான முயற்சியில் இஸ்ரேல் களமிறங்கியுள்ளது. இதன்படி நேற்றைய தினம் (22) கான் யுனுஸ் நகரின் அல்-கைர் மற்றும் அல் அமர் வைத்தியசாலைகளை முற்றுகையிட்டதுடன் அவசர சிகிச்சைகளையும் இஸ்ரேல் துண்டித்ததாகவும் வைத்தியசாலை ஊழியர்களை கைது செய்ததாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்நிலையில் அந்த கண்மூடித்தனமான செயலுக்கு பரிசாக நேற்று நடந்த மோதல்களில் 24 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் இன்று (23) அறிவித்தது.

காசாவில் இஸ்ரேலுக்கு நேர்ந்த மிக மோசமான இழப்புகளில் ஒன்றாக நேற்றைய தினம் இருபத்தி நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இன்று(23) இராணுவம் கூறியது.

இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், ஹமாஸ் போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இடிப்பதற்காக இருந்த இரண்டு கட்டிடங்கள் வெடித்து சிதறியதனால் 21 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றார் . மேலும், தெற்கு காஸாவில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

“போர் மூண்டு இதுவரையான காலப்பகுதியில் நேற்று நாங்கள் மிகவும் கடினமான நாட்களில் ஒன்றை அனுபவித்தோம்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். “எங்கள் மாவீரர்களின் பெயரில், இழந்த எங்கள் உயிருக்காக, முழுமையான வெற்றி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவதை நிறுத்த மாட்டோம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நூறாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் அளித்து வரும் என்கிளேவின் தெற்கில் உள்ள முக்கிய நகரமான கான் யூனிஸின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) திங்களன்று ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டன.

இஸ்ரேல் இராணுவய் திங்களன்று ஒரு மருத்துவமனையைத் தாக்கி, மற்றொரு மருத்துவமனையை முற்றுகையிட்டது. காயமடைந்தவர்களுக்கான அவசர சிகிச்சையையும் இஸ்ரேல் நிறுத்தியதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு காசாவின் முக்கிய நகரமான கான் யூனிஸுக்கு மேற்கே, மத்திய தரைக்கடல் கடற்கரைக்கு அருகில் உள்ள அல்-மவாசி மாவட்டத்திற்குள் முதன்முறையாக இஸ்ரேலின் துருப்புக்கள் முன்னேறின. அங்கு, அவர்கள் அல்-கைர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, மருத்துவ ஊழியர்களை கைது செய்ததாங காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல் கித்ரா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் கூறும் போது, மற்றொரு கான் யூனிஸ் மருத்துவமனையான அல்-அமல், மீட்பு அமைப்பின் தலைமையகத்தையும் இஸ்ரேலின் டாங்கிகள் சுற்றி வளைத்ததாகவும், அது அங்குள்ள எமது ஊழியர்களுடனான தொடர்பினை இழந்ததாகவும் கூறியது.

கான் யூனிஸில் ஒரே இரவில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக கித்ரா கூறினார், அதே நேரத்தில் மருத்துவ வசதிகளை முற்றுகையிட்டதால் மீட்பு பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அம்புலன்ஸ் வாகனங்கள் நகர்வையும் இந்த முற்றுகை தடுத்ததாக கித்ரா தெரிவித்தார்.

24 மணிநேர இடைவெளியில் குறைந்தது 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,490 ஆக உயர்ந்துள்ளது.