14000 டேங்க் ஷெல்களின் விற்பனை இடைநிறுத்திய ஜோ பைடசன் அரசாங்கம்

மனித உரிமை ஆர்வலர்கள் விசனம்

காங்கிரஸின் ஆய்வின்றி இஸ்ரேலுக்கு சுமார் 14,000 டேங்க் ஷெல்கள் (தாங்கி குண்டுகள்) விற்க ஜோ பைடன் அரசாங்கம் குறுக்கீடு செய்து அவசர அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது என பென்டகன் கூறியுள்ளது.

106.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள டேங்க் ஷெல்களை இஸ்ரேலுக்கு உடனடியாக வழங்குவதற்காக, ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அவசரகால அதிகாரத்தை வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளதாக பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான பாரியளவிலான ஆயுத விற்பனையின் ஒருபகுதியாகவே இது அமைந்துள்ளது.இந்த ஆயுத விற்பனைக்கு பைடன் அரசாங்கம் அமெரிக்க காங்கிரஸிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. இந்த பாரிய விற்பனையில் $500 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய மர்கவா தாங்கிகளுக்கான 45,000 ஷெல்களையும் இந்த டீல் உள்ளடக்கியுள்ளது. இஸ்ரேலின் Merkava டாங்கிகள்தான் ஆயிரக்கணக்கான பலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருகின்றது.

போர் தீவிரமடைந்துள்ளதால், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளுக்கு நிபந்தனைகள் போடவோ அல்லது சிலவற்றை நிறுத்தி வைப்பதையோ பரிசீலிக்க எந்த திட்டமும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

மோதலில் அமெரிக்க ஆயுதங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றமை கூடுதல் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. .

பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் முயற்சியுடன் இந்த ஆயுத உதவி ஒத்துப்போகவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இஸ்ரேல் இணங்க வேண்டும் என்றும் பொதுமக்களின் உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்ற விடயத்தில் அமெரிக்கா தெளிவாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுதுறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறும் போது, பென்டகன் அறிக்கையின்படி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக, குறித்த ஷெல்கள் உடனடியாக இஸ்ரேலுக்கு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸுக்கு விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

120 மிமீ குண்டுகளைப் பயன்படுத்தும் இஸ்ரேலின் மர்காவா தாங்கிகள் மூலமே ராய்ட்டர் ஊடகவியலாளர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர் கூறியுள்ளது.