இன்று நடந்த ஊடக சந்திப்பில் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி தெரிவித்த கருத்து,

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வின்றி அரசாங்கம் தவித்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் சிறந்த தீர்வு உள்ளது.அதனை விரைவில் வெளிப்படுத்துவோம்.எனினும் தற்போதைக்கு அதன் குறிப்புகளை கூற விரும்புகிறேன். நோட்டு அச்சிடுவதன் மூலம் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது .அதன் மூலம் நெருக்கடி மேலும் அதிகரித்து விலைவாசி அதிகரிக்குமே தவிர வேறு ஒன்று நடக்காது.ரூபா நோட்டுக்களை அதிகரிப்பதை விட டொலர் கையிருப்பை அதிகரிக்க வேண்டும்.அதற்கு முதல் கடன் தவனையை தாமதப்படுத்த வேண்டும்.அதற்காக உலக வங்கி,சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் . அதன்மூலம் கடன் தவனை செலுத்த கால அவகாச சலுகையை பெற வேண்டும் . அதன்பின்னர் சுற்றுலா துறையின் மூலம் டொலரை அதிகரிக்க விசா தாமதப்படுத்தல் போன்ற விவகாரங்களை ஒன்லைன் மூலம் மேற்கொள்ள வேண்டும் .அதன்மூலம் டொலர் ஈட்டமுடியும்.இது சிறு குறிப்புகள் மாத்திரமே.உர இறக்குமதி செய்து உரப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் .எனவே எம்மிடம் திட்டம் உள்ளது.

அத்தோடு மின்சார துண்டிப்பு இல்லை என்று கூறினாலும் எதிர்வரும் காலத்தில் மின்துண்டிப்பை தடுத்து நிறுத்த முடியாது.

மேலும் ஆகஸ்ட் மாதமளவில் அரசாங்கம் மூன்றாக பிளவடையும். குறிப்பிட்ட சிலரை தவிர அனைவரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவர்.அது நடந்தே தீரும்.அதன்பின் தேர்தல் மூலம் ஆட்சியை கவிழ்ப்போம் என்றார்.