நவீன உலகில் டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் சிறுவர் தலைமுறையை தொழில்நுட்ப திறமையாலும், ஸ்மார்ட் கணிணி திறமையாலும் ,அறிவை அடிப்படையாக கொண்ட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இணைத்து பூரணத்துவத்தை வழங்கும் நோக்குடன் எதிர்க்கட்சி தலைவரின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு டிஜிட்டல் கணிணி உபகரணங்களை வழங்கும் பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் 17 ஆவது கட்ட நிகழ்வு இன்று (10) நடைபெற்றது.

விசேடமாக சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எம்மால் ஏழு நாள் பிரபஞ்சம் வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படுகிறது.

இந்நாட்டு சிறுவர்கள் டிஜிடல் உலகில் தலைநிமிர்ந்து செயற்படும் நோக்கில் செயற்படுத்தப்படுகின்றன டிஜிடல் வகுப்புக்கான நவீன கணனி தொழில்நுட்ப திரைகள் மற்றும் நவீன கணனிகளை வழங்கும் பிரபஞ்சம் திட்டத்தின் 17 ஆவது கட்டமாக எட்டு இலட்சத்து நாற்பத்து ஆறாயிரம் (846,000) ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைக்கான கணனி திரைகள் மற்றும் கணனி உபகரணங்களை பப/ ஜய/ மகாமாயா மகளிர் கல்லூரி அதிபர் எம்.சமிலா குமாரி அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இத்தாலி நாட்டு தூதுவர் ரீடா கியுலியானா மனெல்லா அவர்களும் ஐக்கிய மகளிர் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரும் கலந்து கொண்டனர்.

வலையொளி இணைப்பு-