வடக்கு காஸா பகுதியில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையையும் இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு காசாவில் எஞ்சியிருக்கும் ஒரே மருத்துவமனை இதுவாகும். மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என சுமார் எழுநூறு பேர் தங்கியுள்ளனர்.

..அல் ஷிஃபா மருத்துவமனைக்கு செய்ததை இஸ்ரேலியப் படைகள் இந்த மருத்துவமனைக்குச் செய்துவிடுமோ என்று பாலஸ்தீனியர்கள் அஞ்சுகிறார்கள். இதற்கிடையில், அல் ஷிஃபா மருத்துவமனை ஒரு ஹமாஸ் அமைப்பின் மத்தியநிலையம் என்பதை உறுதிப்படுத்த இஸ்ரேலிய இராணுவம் முயன்றது. ஆனால் மருத்துவமனை ஊழியர்கள், இந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று தெரிவித்தனர். அக்டோபர் 7ஆம் தேதி முதல் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.