அமெரிக்காவின் பென்டகனை மிஞ்சும் அளவுக்கு உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சூரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ((17) திறக்கப்பட்டது. உலகின் வைர தலைநகராக மேற்கு இந்திய நகரத்தை மாற்றும் இலட்சியத்தின் பிரதான நடவடிக்கையாக இதனை கருத முடியும்.


குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் டயமண்ட் போர்ஸ் என்ற அலுவலக வளாகம், 6.7 மில்லியன் சதுர அடி (620,000 சதுர மீட்டர்) பரப்பளவில் கட்டப்பட்டு, ஜூலை மாதத்தில் $384 மில்லியன் டொலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகமாக பதிவாகியுள்ளது.

இதுவரை உலகின் மிகப் பெரிய அலுவலக வளாகமாக 1943 ஆம் ஆண்டு அமெரிக்காவில் திறக்கப்பட்ட லேன்ட் மார்க் காணப்பட்டது.  6.5 மில்லியன் சதுர அடி பரப்பளவைக் கொண்டதாக அது காணப்பட்டது.