சமூக சந்தை பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பத்து அம்ச பொருளாதார வரைவு திட்டம் நேற்று (04) மாலை வெளியிடப்பட்டது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொருளாதார துறையை அடிப்படையாக கொண்ட விசேட தேர்தல் விஞ்ஞாபணமாகும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறல், படுகடன் நெருக்கடி முகாமைத்துவம், நாணய மற்றும் நாணய பரிமாற்றல் கொள்கை, வருமான ஒருங்கிணைப்பு, செலவீன கட்டுப்பாடு, வளர்ச்சியை ஊக்குவித்தல், பொதுத்துறை முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல், எரிசக்தி மற்றும் பயன்பாடுகள் சீர்திருத்தம், காரணி சந்தை சீர்திருத்தம், வலுவான சமூக பாதுகாப்பு வலைகள் என்ற பத்து அம்ச திட்டங்களின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த ஐக்கிய மக்கள் கூட்டணி திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பத்து அம்ச திட்டங்களில் உள்ளடங்கியுள்ள முக்கிய குறிப்புகள்:

*ஊழல்கள் செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கவும், ஆணையற்ற கைது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பறிமுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்குதல்

* சட்டமா அதிபரின் செல்வாக்கில் இருந்து விடுப்பட்ட சுயாதீன பொது வழக்குதொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும். இதன் ஊடாக வழக்குகளை விரைவுப்படுத்துவதுடன் திரும்ப பெற்ற குற்றச்சாட்டுகள் மீது மீண்டும் வழக்கு தாக்கல் செய்தல்.

* உலக தரம் வாய்ந்த பொது பெறுகை சட்டமூலமொன்றை கொண்டு வருதல்

*வெளிநாட்டிலுள்ள திருடப்பட்ட சொத்துகளை மீட்பதற்காக சர்வதேச அமைப்புகளின் கோட்பாடுகளுக்கு அமைய புதிய சட்டங்கள்

* வரவுசெலவுத் திட்ட செலவுகளையும் பலன்களையும் மதிப்பிட பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவகமொன்றை ஸ்தாபித்தல்.

*பொருளாதார வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு

* சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பான கடன் வழங்குநர்களுடன் பேச்சு நடத்துவதுடன் கடன் வழங்குநர்களுக்கு இலங்கை மீதான நம்பகத்தன்மையை மீண்டும் அதிகரித்தல்.

* பொதுப் படுகடன் பரிணாமங்களை முகாமை செய்ய பொதுப் படுகடன் அலுவகமொன்றை ஸ்தாபித்தல்.

* IMF உடன் செய்துக்கொண்ட EFF ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்தல்

திருத்தங்கள் – 

1)வர்த்தகம் செய்யக்கூடிய துறைகளுக்கான கூட்டிணைவு வருமான வரி முறையை மதிபீட்டின் மூலம்  திருத்தல்

2)நடுத்தர வர்க்கத்தினருக்கு நியாயத்தை நிலைநாட்ட சலுகை வழங்குவதோடு அதனால் இழக்கும் வரிகளை மது வரி, சூதாட்ட வரிகளை திருத்துவதன் மூலம் வரி வருமானத்தை மீட்க நடவடிக்கை

3)பொருத்தமற்ற அஸ்வெசும திட்டத்தை நீக்கி தகுதியான புதிய பயனாளிகளை தெரிவு செய்த புதிய திட்டம்.

* இலங்கை மத்திய வங்கிக்கு பூரண சுதந்திரத்தை வழங்குதல்

* அரசிறை மற்றும் நாணய ஒழுக்கத்தை நிலைநாட்டல்

* பணவீக்கத்தை கட்டு்ப்படுத்த , நாணய விகித கொள்கைகளில் திருத்தம் செய்ய மத்திய வங்கிக்கு அனுமதி வழங்கல்

* சுங்கம் மற்றும் மது திணைக்களத்தை உள்ளடக்கிய வருமான ஆணைக்குழுவொன்றை நிறுவுதல்

* வெட் வரியை 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்தல்.

* நடுத்தர வர்க்கத்தின் வரியை 1% முதல் 24% ஆக குறைத்தல். (Paye tex)

* இறக்குமதி தீர்வை வரியை மாற்றல்

* செலவுகள் மீது கட்டுப்பாடு. தேசிய பௌதீக திட்டத்திற்கு வெளியே உள்ள அனைத்து திட்டங்களையும் நீக்குதல்.

* நியாயமான எண்ணிக்கையில் அமைச்சரவை அமைச்சர்கள்

* அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு.

* பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் கால சுகாதார துப்பரவு துவா மாணியம்

* பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு லீவுக்கு நன்மைகள்.

* சஜித்தின் பிரபஞ்சம், மூச்சு திட்டங்கள் நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும்…

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த பத்து அம்ச திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளள

வரைவுத்திட்டம் (BluePrint) பதிவிறக்கம் செய்யவும்👇