பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஸா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த 6 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்ததை அடுத்து மக்கள் வீதிகளில் இறங்கினர்.
பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேலிய அரசாங்கம் தவறிவிட்டதாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.